வீடு கட்டும் பணியில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் விபத்து ஏற்பட்ட அவர்களது உயிர் பிரியநேரத்தால் அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசால் இழப்பீட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது. அதிலும் இதுவரை 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது அதனை 8 லட்சம் ரூபாய் ஆக உயர்த்துவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற துறை சார்ந்த மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது பேசிய சிவி கணேசன் அவர்கள் கூறியிருப்பதாவது :-
✓ தமிழகத்தில் 32 அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய 67.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
✓ திருக்குவளையில் இருக்கக்கூடிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி அமைக்க 3.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
✓ தொலைதூர மாணவர்களுக்காக 50 தங்கும் விடுதிகள் அமைக்க 22.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
✓ கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர்களுக்கு 2 இலவச முதியோர் இல்லங்கள் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
✓ கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய மற்றும் இல்லாத தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படக்கூடிய 5 லட்சம் ரூபாய் தொகையை 8 லட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
✓ ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் என 3 ஆண்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
✓ மேலும் பட்டப்படிப்பு முதுநிலை படிப்பு உயர்கல்வி தொழிற்கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1000 உயர்த்தி வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.