இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து டோல்கேட்டுகளையும் அகற்றுவதற்கும் அதற்கு மாற்றாக புதிய நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாகவும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது போன்ற குற்றச்சாட்டுகளை களைவதற்காக விரைவில் புதிய நடைமுறை ஒன்று வர இருப்பதாகவும் FasTag பயன்படுத்துவதற்கு பதிலாக இனிவரும் காலங்களில் GNSS என அழைக்கப்படும் குளோபல் நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு அடிப்படைகள் புதிய கட்டண முறை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இந்த புதிய முறையின் மூலம் ஒவ்வொரு வாகனங்களும் டிவைஸ்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட எவ்வளவு தூரம் பயணத்திற்கு இருக்கிறதோ அதற்கான கட்டடம் வசூலிக்கப்படும் என்றும் இனி டோல்கேட் அருகில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் போக்குவரத்து நெரிசல் காத்திருப்பு நேரம் போன்றவை இந்த முறையில் இருக்காது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக நாள் ஒன்றுக்கு 20 கிலோமீட்டர் வரை பயணிக்க கூடியவர்களுக்கு கட்டண விளக்கு வழங்கப்படும் என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் இஸ்ரோ தொழில்நுட்ப ஒத்துழைப்பு இந்த புதிய தொழில்நுட்பமான GNSS செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையானது புழக்கத்திற்கு வந்தவுடன் இந்தியர் நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய அனைத்து டோல்கேட்களும் நீக்கப்படும் என்றும் அதன் பிறகு இந்த புதிய முறை சாட்டிலைட் மூலமாக இயங்கி அதற்கேற்றவாறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் இதற்கான கட்டண விவரங்கள் மிக குறைவாகவே இருக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.