அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பரவிய தகவல்களுக்கு ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா பதிலளித்திருக்கிறார்.
பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கூறியிருப்பதாவது :-
என்னுடைய நாட்களை நானே முடிவு செய்யக்கூடிய சூழல் இப்பொழுதுதான் உருவாக்கி இருக்கிறது என்றும் ஏற்கனவே என்னால் என்னுடைய நாட்களை உருவாக்கிக் கொள்ள க்கூடிய சூழல் இருந்தும் நான் உருவாக்கிக் கொள்ளாததற்கு காரணம் என்னுடைய குழந்தைகள் அவர்களுடைய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என தெரிவித்திருக்கிறார்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பிறர் விரும்புவது தான் நடைபெற்று வருகிறது என்றும் ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வதற்காகத்தான் பல பெண்கள் என்று தங்களுடைய வாழ்வில் போராட்டங்களை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நான் எனக்கான விருப்பத்தை தேர்வு செய்துள்ளேன் என்பதை புரிந்து கொள்ளாத அளவிற்கு நானும் என் கணவரும் விவாகரத்து பெற்ற பிரிய முடிவு எடுத்துள்ளோம் என வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இனி தன்னுடைய வாழ்வில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தானாகவே முடிவு செய்ய உள்ளதாகவும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் சந்தோஷங்களை தன்னுடைய விருப்பத்தின் பெயரில்தான் மேற்கொள்ள போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதான் ஒவ்வொரு பெண்களும் எதிர்பார்க்கக் கூடியது என்றும் அதை அவர்கள் தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.