Breaking News, Health Tips

இதய அடைப்பின் முக்கிய அறிகுறிகள் மற்றும் ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்க வழிகள்!!

Photo of author

By Divya

தற்பொழுது நம் நாட்டில் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வருகிறது.

மார்பு பகுதியில் இறுக்க உணர்வு,இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துக் செல்லும் தமனியில் அடைப்பு உண்டாவதை மாரடைப்பு என்கின்றோம்.

மாரடைப்பிற்கான முதல் அறிகுறியாக இருப்பது மார்பு பகுதியில் வலி உண்டாவதுதான்.மார்பு பகுதியில் இறுக்கம் உண்டாவது மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.இடுப்பு வலி,பின்புற வலி போன்றவை மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

அதேபோல் செரிமானப் பிரச்சனை,நெஞ்செரிச்சல் போன்றவை மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்பு அறிகுறிகள்:-

1)மூச்சுத் திணறல்
2)லேசான தலைவலி
3)அடிவயிற்றுப் பகுதியில் வலி
4)இடது கழுத்தில் வலி
5)மார்பு பகுதியில் வலி
6)அதிக வியர்வை
7)கழுத்து பகுதியில் வலி
8)தாடை வலி
9)முதுகு பகுதியில் வலி

மாரடைப்பு தவிர்க்க வழி

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.சீரான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

லப்டப் லப்டப்.. இதயத் துடிப்பு வேகம் அதிகமாக இருக்கா? இதற்கான காரணங்களும் உரியத் தீர்வுகளும்!!

கிட்னி ஸ்டோனுக்கு சிறந்த வைத்தியம்!! ஹாஸ்ப்பிட்டல் செலவே வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!