மனித உடலில் சிறுநீரகம் கழிவுகளை அகற்றும் பணியை செய்கிறது.இந்த சிறுநீரகத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தல்,உப்புகள் படிதல் போன்ற காரணங்களால் கற்கள் உருவாகிறது.சிறுநீரக கல் சிறுநீரகத்தின் பாதை,கருப்பை,சிறுநீர்ப்பை போன்ற எந்த பகுதியிலும் பாதிப்பை உருவாக்கலாம்.
சிறுநீரக கல் பாதிப்பு இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.நம் இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு,புற்றுநோய்க்கு அடுத்து சிறுநீரக கல் பாதிப்பை பலரும் அனுபவித்து வருகின்றனர்.
சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்,சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,சிரமம் போன்றவற்றை சந்தித்தல் போன்ற காரணங்கள் சிறுநீரக கல் அறிகுறியாக இருக்கலாம்.அதேபோல் இடுப்பு பகுதியில் அதிக வலி,வயிறு வீங்குதல் போன்ற பாதிப்புகளும் சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகளாகும்.
சிறுநீரக கல் அறிகுறிகள்:-
1)கடுமையான வயிற்று வலி
2)வாந்தி உணர்வு
3)குமட்டல் உணர்வு
4)இரத்தத்துடன் சிறுநீர் வெளியேறுதல்
5)சிறுநீர் கழிக்கும் பொழுது வலி உணர்வு
6)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
7)வயிறு வீக்கம்
சிறுநீரக கல் உருவாக காரணங்கள்:-
1)தண்ணீர் பருகாமை
2)சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்தல்
3)அதிக உடல் பருமன்
4)பரம்பரைத் தன்மை
5)சிறுநீர் பாதையில் அடைப்பு
6)யூரிக் அமில அளவு அதிகரித்தல்
சிறுநீரக கற்களை கரைக்க மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:
**நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.தினமும் 8 கிளாஸ் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும்.
**சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தால் உடனே கழித்துவிட வேண்டும்.சிறுநீரை அடக்கி வைத்தால் சிறுநீரகத்தில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டுவிடும்.சிறுநீரகத்தில் உள்ள உப்பு நாளடைவில் கற்களாக மாறிவிடும்.
**உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும்.சிறுநீரகத்தில் அதிக கால்சியம் இருந்தால் அவை கற்களாக உருவாகிவிடும்.
**சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் உட்கொள்ளும் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
**தினமும் உறங்குவதற்கு முன் சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும்.பீன்ஸ்,வாழைத்தண்டு போன்றவற்றை கொண்டு சூப் செய்து குடிக்க வேண்டும்.ரணகள்ளி இலையை அரைத்து சாறு எடுத்து பருகினால் சிறுநீரக கல் கரையும்.