முழங்கால் வலி சீக்கிரம் குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும்.
தீர்வு 01:
1)கிராம்பு
2)இஞ்சி
3)ஏலக்காய்
4)கல் உப்பு
5)அரிசி மாவு
6)காட்டன் துணி
முதலில் பத்து இலவங்கம் அதாவது கிராம்பை எடுத்து வாணலியில் லேசாக வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இரண்டு ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி கல் உப்பை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு காட்டன் துணி ஒன்றை எடுத்து விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் கிராம்புத் தூள்,ஒரு துண்டு தோல் நீக்கப்பட்ட இஞ்சி,ஏலக்காய் தூள்,கல் உப்பு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை கொட்டி மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த மூட்டையை வாணலி ஒன்றில் வைத்து சிறிது எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெய் ஊற்றி மூட்டையை சூடாக்க வேண்டும்.பிறகு இந்த மூட்டை லேசாக ஆறவைத்து கால் மூட்டு பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்து வந்தால் வலி தானாக குறையும்.
தீர்வு 02:
1)நல்லெண்ணெய்
2)மஞ்சள் தூள்
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த எண்ணையை ஆறவைத்து மூட்டு பகுதியில் தடவினால் முழங்கால் வலி சீக்கிரம் குணமாகும்.
தீர்வு 03:
1)கல் உப்பு
2)நல்லெண்ணெய்
ஒரு காட்டன் துணியில் சிறிதளவு கல் உப்பு போட்டு முடிந்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் தோசைக்கல் ஒன்றை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
அதன் பிறகு கல் உப்பு மூட்டையை அதில் வைத்து சிறிது நேரம் சூடாக்க வேண்டும்.இதை முழங்கால் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி குறைந்துவிடும்.
தீர்வு 04:
1)வெந்தயம்
2)தண்ணீர்
கிண்ணம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி வெந்தயம் போட்டு ஊறவைக்க வேண்டும்.7 முதல் 8 நேரம் வரை ஊறவைத்த பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.இப்படி செய்து வந்தால் முழங்கால் வலி,மூட்டு வீக்கம் ஏற்படாமல் இருக்கும்.