மனிதர்களுக்கு கோபம் வருவது இயல்பான விஷயம்தான்.கோபத்தை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது.அதிக கோபம் ஒரு மனிதரையே அழித்துவிடும்.அதிக கோபத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அதிக கோபம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடும்.அதிக கோபத்தால் உறவில் விரிசல் உண்டாகிவிடும்.நாம் பொறுமையை இழக்க பல காரணங்கள் இருக்கிறது.யாரும் வேண்டுமென்று கோபப்படுவதில்லை.சூழ்நிலை மனிதர்களுக்கு கோபத்தை உண்டாக்கிவிடுகிறது.
அதிக கோபம் வந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.கோபம் மன ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.கோபம் வந்தால் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.சிலருக்கு அதிக கோபத்தால் நரம்புகள் சேதமாகும்.
கோபம் இதய ஆரோக்கியத்தை முழுமையாக சிதைத்துவிடும்.அடிக்கடி கோபம் வந்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.அதிக கோபம் இதய ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்தால் ஆஸ்துமா,சுவாசப் பிரச்சனை போன்றவை ஏற்படும்.கோபத்தால் மாரடைப்பு பாதிப்பு ஏற்படலாம்.அடிக்கடி கோபம் வந்தால் மூளை வாத நோய் ஏற்படும்.
அதிக கோபம் மற்றும் அடிக்கடி கோபப்படுதலால் இரத்த குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்.கோபத்தால் பிரஷர் அதிகரித்து மயக்கம்,தலைச்சுற்றல்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.கோபம் அதிகமானால் மன அழுத்தம் அதிகரிக்கும்.அதிகமாக கோபப்படும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாவதால் மாதவிடாய் கோளாறு ஏற்படும்.
கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.கோபத்தால் இரத்த கொதிப்பு,இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே உங்கள் கோபத்தை இனி கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.