உடலில் வாதம்,பித்தம்,கபம் இருப்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த வாதம்,பித்தம்,கபம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர்
2)கிளாஸ்
3)சிறுநீர்
4)நல்லெண்ணெய்
செய்முறை விளக்கம்:-
முதலில் உங்கள் சிறுநீரை ஒரு கிளாஸில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பிளாஸ்டிக் கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும.
அடுத்து சிறுநீரை அதில் ஊற்ற வேண்டும்.நல்லெண்ணெய் பாம்பு போன்று வளைந்து சுருண்டால் அது வாதம் இருப்பதை உணர்த்துகிறது.
தண்ணீரில் உள்ள நல்லெண்ணெய் மோதிர வடிவில் அதாவது வட்ட வடிவில் இணைந்தால் அது பித்தம் இருப்பதை உணர்த்துகிறது.இதே நல்லெண்ணெ முத்து போன்று உருண்டு வந்தால் அதில் கபம் இருக்கிறது என்று அர்த்தம்.
வாதம் பித்தம் கபம் குறைய எளிய வீட்டு வைத்தியம் இதோ:
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெல்லம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.சீரகம் நன்றாக வறுபட்டு வந்த பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
சீரகத் தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் வெல்லம் சேர்த்து கரைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த சீரகத் தண்ணீரை வடிகட்டி குடித்தால் வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் குறையும்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி – ஒரு துண்டு
2)வெல்லம் – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த இஞ்சி பானத்தை வடிகட்டி வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வாதம் பித்தம் கபம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படும்.