நாம் சாப்பிடும் இனிப்புகளில் சர்க்கரை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித இனிப்பு பொருள்தான் சர்க்கரை.வெள்ளை சர்க்கரையை வைத்து பல வகையான இனிப்புகள் செய்யப்படுகிறது.
இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்படுகிறது.இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நீரிழிவு நோய்,உடல் பருமன்,இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் வெள்ளை சர்க்கரை மாற்று வெல்லம்,கருப்பட்டி,நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு போன்ற இனிப்புகளை பயன்படுத்துகின்றனர்.
இன்று பலரும் கருப்பட்டி நல்லது என்று நினைத்து அதை பயன்படுத்துகின்றனர்.கருப்பட்டி என்பது பனைமரத்தில் கிடைக்கும் பதநீரில் இருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.அதேபோல் தென்னை மரத்தில் இருந்து பதநீர் எடுத்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.
இந்த கருப்பட்டியை சர்க்கரை பதில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.சர்க்கரையை காட்டிலும் கருப்பட்டி அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
வயது வந்த பெண்களுக்கு கருப்பட்டி சேர்த்து உளுந்து களி கொடுத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.கருப்பட்டியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும்.கருப்பட்டியை வறுத்த சீரகத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை பிரச்சனை நீங்கும்.
இருமல்,ஜலதோஷ பிரச்சனை பிரச்சனை இருப்பவர்கள் குப்பைமேனியை வதக்கி கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.கால்சியம் சத்து அதிகம் நிறைந்த கருப்பட்டியை உளுந்து பருப்புடன் அரைத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.எனவே சர்க்கரைக்கு மாற்று கருப்பட்டியை இனிப்பு சுவைக்காக பயன்படுத்தலாம்.