வெயில் காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? கோடை நோய்கள் அண்டாமல் இருக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

வெயில் காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? கோடை நோய்கள் அண்டாமல் இருக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Divya

இன்னும் இரண்டு மாதங்களுக்கு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகிறது.தற்பொழுது பங்குனி வெயில் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த வெயில் காலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டியது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்தான்.பட்ட பகலில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.கோடை நோய்கள் குழந்தைகளை அண்டாமல் இருக்க பெற்றோர் மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் தோல் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக வரக் கூடும்.தோல் அரிப்பு,தோல் எரிச்சல்,சொறி சிரங்கு,வியர்க்குரு கொப்பளம்,அம்மை,வேனல் கட்டி போன்ற பல பிரச்சனைகளை வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்க நேரிடும்.

வெளியில் சென்று வந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.குழந்தைகளுக்கு காட்டன் துணியை உடுத்த வேண்டும்.வெளியில் செல்லும் பொழுது காலணிகளை அணிவித்து கூட்டி செல்ல வேண்டும்.

தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு ஒரு பாட்டிலில் ஊற்றி குடிக்க வைக்க வேண்டும்.குளிர்பானங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.வேப்பிலை மஞ்சள் போன்ற பொருட்களை தண்ணீரில் கலந்து குளிக்க வைக்க வேண்டும்.

பகல் வெயிலில் குழந்தைகளை விளையாட வைப்பதை தவிர்க்க வேண்டும்.உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களை தவிர்க்க வேண்டும்.அதேபோல் கடைகளில் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் வெட்டி வைத்து நீண்ட நேரம் ஆன பழங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.கோடை காலத்தில் இறுக்கமான ஆடைகள் அணிவிக்க கூடாது.வெப்பத்தை ஈர்க்கும் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.இளநீர்,தர்பூசணி,வெள்ளரி,மோர்,நுங்கு போன்ற இயற்கை குளிர்ச்சி கொண்ட பொருட்களை சாப்பிடக் கொடுக்க வேண்டும்.