தற்பொழுது ஆரோக்கியம் இல்லாத உணவுகள் சாப்பிடுவது மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது அதிகமாகியுள்ளது.உணவில் உப்பு,சர்க்கரை,காரம் மற்றும் எண்ணையை குறைந்துக் கொண்டாலே ஆரோக்கியமாக வாழலாம்.
அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும்.அதேபோல் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் எல்டிஎல் கொழுப்பை அதிகரித்துவிடும்.
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்கின்றனர்.நாள் முழுவதும் எண்ணையில்லாத உணவுகளை சாப்பிடுவதுதான் எண்ணையில்லா உணவு.இதை பலரும் கடைபிடித்து வருகின்றனர்.உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்றால் இல்லை என்பது உண்மையான பதில்.
நமது உடலுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் எண்ணெய் சத்தும் ஒன்று.எண்ணையில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் இருக்கின்றது.அதேபோல் உடலில் எண்ணெய் குறைந்தால் கண் பார்வை பாதிக்கப்படும்.
உடலில் நோய் எதிர்ப்பு செயல்பாடு பாதிக்கப்பட்டுவிடும்.உடலில் எண்ணெய் குறைந்தால் எலும்பு ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.இரண்டு முதல் ஒரு மாதங்கள் வரை எண்ணெய் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
எண்ணெய் இல்லா உணவு உடலில் சோர்வை அதிகரித்துவிடும்.உடலில் எண்ணெய் குறைந்தால் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.எண்ணையில் இருக்கின்ற அத்தியாவசிய கொழுப்பு நமது உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடல் மோசமான விளைவுகளை சந்திக்கக் கூடும்.
நீங்கள் எண்ணெய் சேர்க்காத உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பு கிடைக்க மீன்,பாதாம் பருப்பு,வால்நட்,ஆளிவிதை,சியா விதை,ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளை சாப்பிட வேண்டும்.இதுபோன்ற உணவுகளால் உடலில் அத்தியாவசிய கொழுப்பை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.