நாம் உயிர் வாழ அவசியமான ஒன்று தண்ணீர்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள அவசியம் தண்ணீர் பருக வேண்டும்.உடல் உறுப்புகள் இயங்க தண்ணீர் அவசியமான ஒன்றாகும்.அனைவரும் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அவசியம் பருக வேண்டும்.
உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.வீட்டில் இருக்கும் பொழுது பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கலாம்.ஆனால் வெயிலில் செல்லும் பொழுது வாட்டர் பாட்டிலில்தான் தண்ணீரை கொண்டு சென்று பருக முடியும்.தண்ணீர் கொண்டு செல்ல முடியாதவர்கள் கடையில் விற்கும் தண்ணீரை வாங்கி பருகுகின்றனர்.
நாம் வீட்டில் வாட்டர் பாட்டிலை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்துவோம்.ஆனால் வெளியில் விற்கப்படும் வாட்டர் பாட்டிலில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.வெளியில் வாங்கி பருகும் தண்ணீரால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
வெளியில் வாங்கும் தண்ணீர் மற்றும் பாட்டிலில் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.நாம் வீட்டில் பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலை கழுவத் தவறினால் கிருமித் தொற்றுகள் அண்டிவிடும்.அப்படி இருக்கையில் வெளியில் வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலின் நிலையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
அதிக கிருமித் தொற்றுகள் இருக்கின்ற வாட்டர் பாட்டிலை பயன்படுத்தும் பொழுது வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.வயிற்றுவலி,வயிறு வீக்கம்,சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
வாட்டர் பாட்டிலில் வாய் வைத்தபடி குடித்தல்,வாட்டர் பாட்டில் நீரை நீண்ட நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்துதல்,வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் நமது உடலில் நேரடியாக பாக்டீரியா,கிருமிகள் தேங்கிவிடுகிறது.எனவே கடைகளில் வாட்டர் வாங்கி பருகாமல் வீட்டில் வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
தினமும் வாட்டர் பாட்டிலை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவிய பின்னர் தண்ணீர் ஊற்றி பருக வேண்டும்.அதேபோல் அடிக்கடி சோப் பயன்படுத்தி வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.