மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு முடிவடைகிறது.
இந்தியாவில் இருக்கக்கூடியவர்களுக்கு ஆதார் எண் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விவசாயிகளுக்கும் தனியாக அடையாள எண் வழங்குவது முக்கியம் என அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்ட விவசாயிகளின் உடைய பட்டா செட்டா போன்றவற்றை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் நிலத்தினுடைய விவரங்கள் இணைக்கப்பட்டு இவற்றிற்காக பிரத்தியேக எண் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விவசாயிகள் தங்களுடைய சிட்டா அடங்கள் மற்றும் ஆதார் அட்டை இரண்டையும் வைத்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசினுடைய அனைத்து சலுகைகளையும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் விவசாயிகள் இன்னும் இதனை முறையாக செய்து முடிக்கவில்லை என்றும் அதற்கான காரணம் தங்களுடைய முன்னோர்களின் பெயரில் இருக்கக்கூடிய இளங்கலை தங்களுடைய பெயர்களுக்கு மாற்றி அதன் பின்பு இந்த எண்ணிற்கு விண்ணப்பிக்க காலதாமதம் ஏற்படுவதால் கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.