ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ நம் உணவுப் பழக்கத்தை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்!!

Photo of author

By Divya

ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ நம் உணவுப் பழக்கத்தை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்!!

Divya

மனிதர்களுக்கு உணவு,நீர் ஆகியவை உயிர் வாழ்வதற்கான அடிப்படை விஷயமாக இருக்கிறது.இவை இரண்டும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நாம் சாப்பிடும் உணவில் கால்சியம்,புரதம்,இரும்பு,வைட்டமின்கள்,தாதுக்கள் நிறைந்திருக்க வேண்டும்.

இளமை வயதில் நாம் ஆரோக்கிய உணவுகளை தவிர்த்தால் வயதாகும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.தினசரி காய்கறி,பழங்கள் மற்றும் கீரைகளை சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனையை தவிர்க்கலாம்.நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் தோல் சுருக்கம்,தோல் வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனவே நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்.அதேபோல் வைட்டமின் பி 12,வைட்டமின் டி உணவுகளை சாப்பிட வேண்டும்.கண் பார்வை திறனை அதிகரிக்க வைட்டமின் ஏ உணவுகளை சாப்பிடலாம்.

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பால்,சோயா,காளான்,உலர் விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.புரதச்சத்து கிடைக்க முட்டை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி சத்து கிடைக்க சூரிய ஒளிபடும் படியாக நடக்க வேண்டும்.இரத்தம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க பேரிச்சம் பழம்,முருங்கை கீரை,உலர் விதைகளை உட்கொள்ளலாம்.டீ,காபி போன்ற ஆரோக்கியம் இல்லாத பானங்களை தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சை பானம்,தேன் கலந்த தண்ணீரை பருகலாம்.கால்சியம் சத்து கிடைக்க பால் பருகலாம்.மருத்துவ குணம் நிறைந்த மசாலாக்களை உட்கொள்ளலாம்.ஹோட்டல் உணவுகள்,காரணமான உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆட்டிறைச்சி உணவுகளை மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை உட்கொள்ளலாம்.மீன் உணவுகளை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஜங்க் புட்,பாக்கட் உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.தினமும் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும்.மைதா உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.