கோடையில் அசைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் இதை கட்டாயம் செய்யுங்கள்!! இல்லைனா பிரச்சனை உங்களுக்குதான்!!

0
3

உங்களில் பலர் அசைவப் பிரியர்களாக இருப்பீர்கள்.அசைவத்தில் மட்டன்,சிக்கன்,மீன் என்று பல வகைகள் இருக்கின்றது.அசைவ உணவுகளில் புரதம்,அமினோ அமிலங்கள்,இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.

அசைவ உணவுகளை பிரியாணி,குழம்பு,கிரேவி,சில்லி,வறுவல் என்று பல விதங்களில் எடுத்துக் கொள்கின்றோம்.அசைவ உணவுகள் எலும்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.கோழி இறைச்சியில் புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது.இரத்த உற்பத்தியை அதிகரிக்க அசைவ உணவுகளை சாப்பிடலாம்.வைட்டமின் குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மீனில் அதிக நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது.மீன் உணவுகளை உட்கொண்டால் சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள் அசைவ உணவுகளை உட்கொள்ளலாம்.ஆடு,கோழி ஆகிய இறைச்சிகளில் புரதம் நிறைந்து காணப்படுகிறது.அசைவ உணவில் வைட்டமின் பி 12 நிறைந்து காணப்படுகிறது.உடல் தசைகளை வலிமைப்படுத்தி அசைவ உணவுகளை உட்கொள்ளலாம்.

அசைவ உணவுகளில் செலினியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.அசைவ உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அசைவ உணவுகள் தாதுக்கள் பற்றாக்குறையை போக்குக்குகிறது.

என்னதான் அதிக நன்மைகள் அசைவத்தில் இருந்தாலும் அதை கோடை காலத்தில் உட்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.அசைவ உணவுகள் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் பிரச்சனை,வயிற்று வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

அதேபோல் அசைவ உணவுகளில் இருக்கின்ற அதிக புரதம் நமது உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.எனவே அசைவ உணவு உட்கொள்ளவதற்கு முன்னர் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அல்லது பழங்களை உட்கொள்வது நல்லது.நார்ச்சத்து நிறைந்த பொருள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Previous articleஆயுள் முழுவதும் நோயின்றி வாழ நம் உணவுப் பழக்கத்தை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்!!
Next articleஉங்களுக்கு தயிர் மாதிரி திரி திரியா வெள்ளைப்படுதல் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!