நாம் பயன்படுத்தி வரும் ஆயுர்வேத மூலிகைகளில் திரிபலாவிற்கு தனி சிறப்பு உண்டு.நெல்லிக்காய்,தான்றிக்காய்,கடுக்காய் ஆகிய மூன்றையும் கொண்டு திரிபலா சூரணம் தயாரிக்கப்படுகிறது.இந்த திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இந்த திரிபலா சூரணம் ஒரு பழங்கால மூலிகையாக உள்ளது.
திரிபலா சூரணத்தை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு அமைப்பு மேம்படும்.திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.
மன அழுத்தம் கட்டுப்பட தினமும் திரிபலா சூரணம் தேநீர் குடிக்கலாம்.உடலில் படியும் தேவையற்ற கழிவுகள் நீங்க திரிபலா சூரணத்தை மருந்தாக உட்கொள்ளலாம்.திரிபலா சூரணம் சரும ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.
கண் பார்வை அதிகரிக்க திரிபலா சூரணத்தில் தேநீர் போட்டு குடிக்கலாம்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள திரிபலா சூரணத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.இதயம் சம்மந்தமான தொந்தரவுகளை அனுபவித்து வருபவர்கள் திரிபலா சூரணத்தை வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
குடலில் தேங்கிய கழிவுகள் மற்றும் புழுக்கள் வெளியேற திரிபலா சூரணத்தை சாப்பிடலாம்.இந்த பொடியை இரவில் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
மூட்டு வலி,மூட்டு வீக்கம்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் திரிபலா சூரணத்தை உட்கொள்ளலாம்.இதை மாத்திரை,பொடி என்று எந்த வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.இந்த திரிபலா பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.
திரிபலா டீ செய்வது எப்படி?
தேவைப்படும் பொருட்கள்:
1)திரிபலா பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அளவு திரிபலா சூரணத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த திரிபலா பானத்தை குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.