எலுமிச்சை சாறில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்!! யாரெல்லாம் இதை சாப்பிடவேக் கூடாது தெரியுமா?

Photo of author

By Divya

எலுமிச்சை சாறில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்!! யாரெல்லாம் இதை சாப்பிடவேக் கூடாது தெரியுமா?

Divya

நாம் அடிக்கடி உட்கொள்ளும் எலுமிச்சையில் நார்ச்சத்து,வைட்டமின் சி போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது.எலுமிச்சை சாறில் ஜூஸ்,சாதம்,டீ போன்றவை செய்து உட்கொள்கிறோம்.

தினமும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்கும்.எலுமிச்சை சாறு சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.எலுமிச்சையில் இருக்கின்ற வைட்டமின் சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சையை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.எலுமிச்சையில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

எலுமிச்சை டீ குடித்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.சிறுநீரகத்தில் கற்கள் படியாமல் இருக்க எலுமிச்சை தேநீர் குடிக்கலாம்.உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்க எலுமிச்சை பானம் உட்கொள்ளலாம்.

வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சரி செய்து கொள்ள எலுமிச்சை சாறு பருகலாம்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது.எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சரும நோய்கள் நீங்கும்.

எலுமிச்சை சாறு நல்லது என்றாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்தாக மாறிவிடும்.வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.எலுமிச்சை ஜூஸ் சிலருக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும்.

வாய்ப்புண்,அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் எலுமிச்சை ஜூஸ் செய்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.சிலருக்கு எலுமிச்சை பழம் ஒற்றைத் தலைவலி பாதிப்பை உண்டாக்கலாம்.எலுமிச்சை சாறு சிலருக்கு வாந்தி,குமட்டல் பாதிப்பை ஏற்படுத்தலாம்.பல் கூச்சம்,பற்சிதைவு போன்ற பாதிப்புகள் எலுமிச்சை சாறு பருகுவதால் ஏற்படலாம்.