தினம் இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் 90 வயதிலும் ஆக்ட்டிவாக எழுந்து ஓடுவீங்க!!

Photo of author

By Divya

தினம் இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் 90 வயதிலும் ஆக்ட்டிவாக எழுந்து ஓடுவீங்க!!

Divya

நாம் தினமும் வித விதமான உணவுகளை சாப்பிட்டாலும் பின்பற்றும் உணவுமுறை பழக்கம் ஆரோக்கியமற்றதாக இருந்தால் ஒரு பயனும் இல்லாமல் போய்விடும்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சிறுதானிய உணவுகள் மட்டுமே பிரதான உணவாக இருந்தது.கம்பு,ராகி போன்றவற்றில் உணவு தயாரித்து உட்கொண்டு வந்தனர்.

இது தவிர குதிரைவாலி,வரகு,சாமை,தினை,சோளம் போன்ற சிறு தானியங்களும் உணவாக பயன்படுத்தப்பட்டது.இதில் ராகியை பெரும்பாலான மக்கள் உணவாக உட்கொண்டு வந்தனர்.ராகியில் கால்சியம்,இரும்பு,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

ராகியில் லட்டு,அடை, உருண்டை போன்றவை செய்து சாப்பிட்டு வந்தாலும் ராகி களி பேமஸான உணவாக பார்க்கப்படுகிறது.கொதிக்கும் நீரில் ராகி மாவை போட்டு உப்பு கிளறி இறக்கி உருண்டை பிடிக்க வேண்டும்.இந்த ராகி உருண்டைக்கு வேர்க்கடலை சட்னி,கருவாட்டு குழம்பு,கீரை குழம்பு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

இந்த ராகி உருண்டையை தண்ணீரில் போட்டு தயிர் ஊற்றி கரைத்து குடித்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.ராகி காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.ராகியில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.ராகி களி சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

செரிமானப் பிரச்சனை நீங்க ராகி களி சாப்பிடலாம்.ராகி களியை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.குடல் இயக்கம் மேம்பட ராகி களியை உட்கொள்ளலாம்.ராகியில் இருக்கின்ற நார்ச்சத்து பைல்ஸ் பாதிப்பை தடுக்கிறது.உடல் எடையை குறைக்க ராகி களியை தினமும் சாப்பிடலாம்.

கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு கரைய ராகி களியை சாப்பிடலாம்.இதய ஆரோக்கியம் மேம்பட ராகி களி சாப்பிட வேண்டும்.இரத்த சோகை பிரச்சனையை சரி செய்து கொள்ள ராகி களி சாப்பிடலாம்.இரத்தத்தில் இருக்கின்ற சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ராகி களியை உட்கொள்ளலாம்.உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்க ராகியை உணவாக சாப்பிடலாம்.