80 வயதில் 20 வயது வலிமை கிடைக்க.. பாலில் இந்த பொடி கலந்து தினமும் குடிங்க!!

Photo of author

By Divya

80 வயதில் 20 வயது வலிமை கிடைக்க.. பாலில் இந்த பொடி கலந்து தினமும் குடிங்க!!

Divya

உங்கள் உடல் எலும்பு வலிமை அதிகரிக்க,மூட்டு வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க இந்த பாலை தினமும் குடித்தால் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து – ஒரு கப்
2)பார்லி அரிசி – அரை கப்
3)ஏலக்காய் – ஐந்து
4)வெள்ளை எள் – 25 கிராம்
5)பால் – ஒரு கப்
6)நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் கருப்பு உளுந்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

அடுத்து 25 கிராம் வெள்ளை எள்ளை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பஅதேபோல் அரை கப் பார்லியை அதில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இதனுடன் ஐந்து ஏலக்காயை போட்டு வறுக்க வேண்டும்.

இந்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் அரைத்த பொடி தேவையான அளவு கொட்டி கெட்டிப்படாமல் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பால் நன்கு கொதித்து வந்ததும் ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் எலும்புகள் பலம் கூடும்.மூட்டு வலி,முதுகு வலி,கை கால் வலி அனைத்தும் குணமாக இந்த பாலை குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி – ஒரு கப்
2)கருப்பு உளுந்து – கால் கப்
3)நாட்டு சர்க்கரை – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் ராகி போட்டு வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டிவிட வேண்டும்.அடுத்து இதில் கால் கப் கருப்பு உளுந்து போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

பின்னர் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்த பொடி இரண்டு தேக்கரண்டி அளவு அரைத்த பொடி போட்டு கலந்துவிட வேண்டும்.

அடுத்து இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மூட்டு வலி,எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.