வெயில் காலத்தில் அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த.. இதை அங்கு தடவி குளிங்க!!

Photo of author

By Divya

வெயில் காலத்தில் அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த.. இதை அங்கு தடவி குளிங்க!!

Divya

தற்பொழுது அதிக வெயில் தாக்கத்தால் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது அதிகரிக்கிறது.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை சுரந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.

தீர்வு 01:

கற்றாழை
மஞ்சள் தூள்

ஒரு கற்றாழை மடலின் ஜெல்லை பிடித்து தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூளை கற்றாழை ஜெல்லுடன் போட்டு மிக்ஸ் செய்து அக்குளில் பூசி உலரவைத்து க்ளீன் செய்தால் வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.

தீர்வு 02:

வெட்டி வேர் பொடி
பாசிப்பருப்பு பொடி
ரோஸ் வாட்டர்
சந்தனத் தூள்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.வாங்கிக் கொள்ள வேண்டும்.இதில் வெட்டி வேர் பொடி,பாசிப்பருப்பு பொடி மற்றும் சந்தனத் தூள் ஆகிய மூண்றையும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் சேர்க்க வேண்டும்.

அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் கலக்க வேண்டும்.அதன் பிறகு அக்குள் பகுதியில் இதை தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் குளிர்ந்த நீரில் அக்குளை க்ளீன் செய்ய வேண்டும்.இதுபோன்று செய்தால் அக்குள் துர்நாற்றம் நீங்கும்.

தீர்வு 03:

தயிர்
ரோஸ் வாட்டர்
சந்தனத் தூள்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனத் தூளை போட்டு கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர்,ஒரு தேக்கரண்டி தயிர் ஊற்றி கலந்துவிட வேண்டும்.இந்த பேஸ்டை அக்குளில் தடவி குளித்தால் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

தீர்வு 04:

வேப்பிலை பொடி
ரோஸ் வாட்டர்
மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடி,ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் ஒன்றரை தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும்.இதை அக்குள் மீது தடவி சுத்தம் செய்தால் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.