80 காலகட்டங்களில் இருந்து இளையராஜா இசை உலகை ஆழ துவங்கி விட்டார் என்றும் இசை மாமேதை இசை ஞானி இசை கடவுள் என பல்வேறு பெயர்களால் ரசிகர்கள் இளையராஜாவை அழைத்து வருகின்றனர். இப்படி இசையுலகில் 50 ஆண்டு காலமாக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி இருக்கக்கூடிய ஒருவரின் இசை பிடிக்கவில்லை என பிரபலம் தெரிவிப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா தெரிவித்திருப்பதாவது :-
அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா அவர்களை பஞ்சு அருணாச்சலம் அறிமுகப்படுத்திய பொழுது இந்த இசையமைப்பாளர் இன்னும் 25 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளாக விளங்குவார் என அப்பொழுதே தான் கணித்ததாகவும் ஆனால் தனக்கு அவருடைய இசையில் சுத்தமும் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். காரணம் இளையராஜாவிற்கு முன்னதாக தமிழ் சினிமா துறையில் எத்தனையோ இசை அமைதிகள் இருந்துள்ளனர் என்றும் அவர்களில் ஒருவரை பின்பற்ற கூடியவராகவே இளையராஜா இருக்கிறார் என்று மற்றபடி இசைக்கே ராஜா என்ற அளவிற்கு நாம் இவரை புகழ்ந்து விடக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இளையராஜா இசையில் வளர்ந்த பின்பு தான் பாப் மார்லி போன்ற மக்கள் பிரச்சனைகளை பாடக்கூடியவர்கள் வந்தனர் என்றும் அவர்களை குப்பை என இளையராஜா கூறியிருப்பதையும் குறிப்பிட்டார். இளையராஜாவைப் போன்ற பாப் மார்லியும் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து இசையை மக்கள் மத்தியில் சேர்ப்பதற்காக வந்தவர் என்றும் இளையராஜா சினிமாவின் மூலமாக இசையை மக்கள் மத்தியில் சேர்க்கும் பொழுது பாப் மார்லி நேரடியாகவே இசையை மக்களிடம் கொண்டு போய் புரட்சிகரமாக சேர்த்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய விடாமுயற்சியால் தனக்கு மிகவும் பிடித்த இசையை அதிலும் மக்கள் இசையை நேரடியாக மக்களிடம் போராடி சேர்த்தவர் பாப் மார்லி என்று அவரை பாராட்டா விட்டாலும் குப்பை என இளையராஜா சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் நான்தான் பெரியவன் என்று ஆதிக்கத்தால் அனைவரையும் இழிவுபடுத்தக் கூடிய ஒருவராகவே இளையராஜா இருக்கிறார் என்றும் சாருநிவேதிதா தெரிவித்திருக்கிறார்.