ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு மீண்டும் பைல்ஸ் பாதிப்பு வருமா? மருத்துவர் சொன்ன உண்மை!!

Photo of author

By Divya

ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு மீண்டும் பைல்ஸ் பாதிப்பு வருமா? மருத்துவர் சொன்ன உண்மை!!

Divya

ஆசனவாய் பகுதியில் உள்ள சதைகளில் தோன்றும் புண்களை மூலம் அதாவது பைல்ஸ் பாதிப்பு என்று அழைக்கின்றோம்.பைல்ஸ் பாதிப்பு மலம் கழிப்பதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.நாள்பட்ட
மலச்சிக்கல்,மலத்தை அடக்கி வைத்தல்,நீர்ச்சத்து குறைபாடு,செரிமான அமைப்பில் பிரச்சனை போன்ற காரணங்களால் பைல்ஸ் உண்டாகிறது.

பைல்ஸை குணப்படுத்த தற்பொழுது பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது.மூல நோயில் உட்புற மற்றும் வெளிப்புற மூல நோய் என்று இரு வகைகள் இருக்கின்றது.

மூல நோய் அறிகுறிகள்:

1)ஆசனவாயில் துர்நாற்றம்
2)மலத்தில் சிவப்பு இரத்தம் வெளியேறுதல்
3)மலம் கசிதல்
4)மலம் கழிப்பதில் சிரமம்
5)குத சளி வருதல்

மூல நோய்க்கான காரணங்கள்

1)நாள்பட்ட மலச்சிக்கல்
2)கர்ப்பம்
3)உடல் பருமன்
4)கடுமையான செரிமானப் பிரச்சனை

பைல்ஸ் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.மலத்தை அடக்கி வைக்காமல் வெளியேற்றிவிட வேண்டும்.

மூல நோய் உயிரை பறிக்கும் பாதிப்பு இல்லையென்றாலும் அதனை குணப்படுத்திக் கொள்ள தவறினால் கடுமையான கொடுமைகளை அனுபவிக்க நேரிடும்.மூல நோயில் நான்கு நிலை இருக்கின்றது.இதில் முதல் மூன்று நிலையில் இருப்பவர்களுக்கு பைல்ஸ் அறுவை சிகிச்சை எளிதில் மேற்கொள்ள முடியும்.நான்காம் நிலை பைல்ஸ் ஆபத்தை உண்டாக்கலாம்.

பெரும்பாலானோருக்கு மூல நோய் அறுவை சிகிச்சை செய்த பின்னர் மீண்டும் வருமா என்று கேள்வி இருக்கிறது.இதற்கு மருத்துவர்கள் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மீண்டும் அந்த பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.ஆனால் இதன் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும்.

மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சில விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும்.எப்சம் குளியல் போட வேண்டும்.ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்.அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.