தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களுடைய கல்வி தரம் குறித்து பல முக்கிய முடிவுகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் கட்டாயமாக கல்வி என்பது ஒன்று கோளாய் அமைய வேண்டும் என்பது யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. எனினும் இப்பொழுது பல தனியார்கள் பள்ளிகளில் ஸ்டேட் போர்டு சிபிஎஸ்சி என பல்வேறு கல்வித் தகுதிகள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் முக்கிய முடிவுகள் :-
✓ அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகள் உட்பட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 6000 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
✓ 2000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு வசதிகள் செய்யவும் அதன் மூலம் கல்வி தரத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
✓ பள்ளிகளில் அதிநவீன வசதிகளை பொருத்துவதன் மூலம் கிராமத்தில் இருக்கக்கூடிய மாணவர்களின் நவீன தொழில்நுட்ப அறிவு வளரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ 2025 2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை AI மற்றும் கோடிமுறை போன்ற அத்தியாவசிய பாடங்கள் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கணினி அறிவியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் இயந்திரம் கற்றல் போன்றவற்றையும் பாடத்திட்டங்களாக இணைக்க அடிப்படை கவனங்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் மாணவர்கள் விரிவான கல்வியை பெற முடியும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி நிலை மாற்றத்தின் மூலம் மாணவர்கள் எளிமையான முறையில் அணுகக் கூடியதாகவும் ஏற்கக் கூடியதாகவும் நவீன கல்வி அமையும் என்றும் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் உடைய முக்கியத்துவம் எதிர்கால மாணவர்களுக்கு கிடைப்பதோடு கல்வி மேம்பாட்டிற்கான வளர்ச்சி மாணவர்களிடையே அதிகரிக்கும் என்றும் திறமையான அறிவுள்ள மற்றும் எதிர்கால தலைமுறைகளை வளர்ப்பதில் அரசு இதுபோன்ற ஒரு முக்கிய முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.