காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான வகுப்புகள் வருகிற புதன்கிழமை அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என இணைப்பதிவாளர் பா ஜெய்ஸ்ரீ அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
2025 ஆம் நிதி ஆண்டிற்கான 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கக்கூடிய கூட்டுறவு நிறுவனங்களை சேர்ந்த நிரந்தர பணியாளர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் கட்டாயமாக 10 வது மற்றும் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் இதற்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்றும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கூட்டுறவு மேலாண்மை துறைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி குறித்த மேலும் விவரங்களை அறிய நினைப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஏப்ரல் 16ஆம் தேதி விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் புகைப்படங்கள் போன்றவற்றை வைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் விண்ணப்ப கட்டணம் 100 ரூபாயை இணைய வழியாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான கட்டணம் 20,850 ரூபாய் மட்டும் பயிற்சி பெறுபவர்களிடம் நேரடியாக பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு ,
அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம்,
5A வந்தவாசி சாலை,
ஆட்சியர் அலுவலகம் எதிரே,
காஞ்சிபுரம் – 631501
தொலைபேசி எண் – 04427237699