தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்ஷய திருதியை நன்னாளானது மக்களால் பெரிதளமும் போற்றப்பட்டு வருவதோடு அந்த நாளில் தங்கம் வாங்கி வைப்பதால் சகல செல்வங்களும் தங்களது வீட்டில் நிறைந்து வழியும் என மக்கள் அனைவரும் நம்பி அதன்படி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று வருகிற ஏப்ரல் 30 அன்று 2025 ஆம் ஆண்டுக்கான அக்ஷய திருதியை வரக்கூடிய நிலையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
பொதுவாக அக்ஷய திருப்தியை அன்று நேரில் சென்று தங்கம் வாங்குவது சற்று சிரமமான காரியம் என்பதால் பலரும் முன்கூட்டியே சென்று தங்களுக்கு தேவையான நகையை தேர்வு செய்து அவற்றிற்கான பணம் முழுவதையும் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டு வருவது வழக்கமான ஒன்று. இதில் பலரும் முழுவதுமாக பணம் செலுத்த முடியவில்லை என்றாலும் மாதாந்திர தவணை திட்டத்தின் மூலம் அக்ஷய திருப்தியை நன்னாளில் தங்கம் வாங்குவதற்காக சேமிப்புகளை துவங்குகின்றனர்.
ஆனால் இந்த ஆண்டு இதில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அவை பின்வருமாறு :-
✓ முதலில் அக்ஷய திருப்தியை நன்னாளில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் முன்கூட்டியே சென்று தங்களுக்கு தேவையான நகைகளுக்கான முழு பணத்தையும் செலுத்தி முன்பதிவு செய்வது வழக்கம். ஆனால் சமீப காலமாக தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து வரும் நிலையில் இந்த மாத துவக்கத்தில் விலையானது சரிந்தது குறிப்பிடத்தக்கது.
✓ இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில், தங்கத்திற்கு முழு பணத்தையும் செலுத்தி முன்பதிவு செலுத்தக்கூடியதானது மக்களிடையே குறைந்திருக்கிறது. எனவே நிலையில்லா தங்கம் விலையை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் அதிக அளவு ஆர்வம் செலுத்துகின்றனர்.
✓ இந்த ஆண்டு அக்ஷய திருதியைக்கு நகை வாங்க நினைப்பவர்கள் தங்களுக்கு தேவையான நகைகளை முன்பணம் மட்டுமே செலுத்தி புக் செய்து வைத்துக்கொண்டு அக்ஷய திருதியை அன்று வகை கடைகளுக்கு சென்று முன்பதிவு செய்த நாளிலிருந்து அக்ஷய திருப்தியை நாளுக்குள் எந்த நாளில் நகையின் விலை ஆனது குறைந்து இருக்கிறதோ அந்த நாளினுடைய விலைமதிப்பின்படி தங்கத்திற்கான முழு பணத்தையும் செலுத்தி தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தங்கம் வாங்க நினைப்பவர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு அறிவிப்பானது வெளியாகாமல் முதல் முறை இந்த ஆண்டு வெளியாவது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.