வருகிற ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் புனித தளத்திற்கு 1.72 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திடீரென 52 ஆயிரம் இந்தியர்களுக்கான தங்கும் இடத்தை ரத்து செய்து இருக்கிறது.
சவுதி அரேபியா அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடிய 1.72 லட்சம் இந்தியர்களில் 52,000 இந்தியர்கள் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு மூலமாக செல்ல இருப்பதாகவும், இவர்களுக்கு மெக்கா அருகில் இருக்கக்கூடிய மினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மினாவில் இந்தியர்களுக்காக 5 மண்டலங்களாக இடம் பிரிக்கப்பட்டுள்ளது தற்பொழுது 2 மண்டலங்களில் தங்குவதற்கான வசதியின் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் பீதமுள்ள 3 மண்டலங்களில் தங்குவதற்கான பணத்தை செலுத்தக்கூடிய வழியை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காரணம், ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் சவுதிக்கு புனித யாத்திரை செல்லக்கூடிய இந்தியர்களின் உடைய கட்டணம் தாமதமாக செலுத்தப்பட்டதால் இது போன்ற ஒரு முடிவை சவுதி அரேபியா எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த ஒன்றிய அரசு இது குறித்து சவுதி நாட்டிடம் பேச வேண்டும் என்றும் இந்தியர்கள் நிம்மதியாக ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றிய அமைச்ச ஜெய்சங்கர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.