குடல் இம்யூனிட்டி அதிகரிக்க இந்த பொருளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

Photo of author

By Divya

குடல் இம்யூனிட்டி அதிகரிக்க இந்த பொருளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

Divya

சிலருக்கு சிறிதளவு காரம் சாப்பிட்டாலும் வயிறு எரிச்சல் உணர்வு அதிகமாக இருக்கும்.இதற்கு காரணம் குடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் இருப்பதுதான்.எனவே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நன்னாரி வேர் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் இரண்டு நன்னாரி வேரை கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

இந்த நன்னாரி பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.பிறகு இதை நன்றாக ஆறவைத்து வடிகட்டி குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

இந்த சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த சீரக பானத்தை வடிகட்டி குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர் – ஒரு கப்
2)புதினா – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

ஒரு கப் பசுந்தயிரை அதில் கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.புளிக்காத தயிராக இருக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து நான்கு புதினா இலைகளை பொடியாக நறுக்கி தயிரில் கலந்து சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.