குடல் புண்ணை குணமாக்கும் உணவுகள்!! இதையெல்லாம் சாப்பிடலாம் இருப்பது நல்லது!!

Photo of author

By Divya

குடல் புண்ணை குணமாக்கும் உணவுகள்!! இதையெல்லாம் சாப்பிடலாம் இருப்பது நல்லது!!

Divya

வயிற்றில் ஏற்படும் அல்சரை குடல் புண் என்று சொல்கின்றோம்.ஆரோக்கியமற்ற உணவுகள்,சீரற்ற உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் குடல் புண் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த குடல் புண் பிரச்சனை இருப்பவர்கள் ஆபத்தை உணராமல் இருந்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

குடல் புண் பாதிப்பின் அறிகுறிகள்:

1)கடுமையான வயிற்று வலி
2)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு
3)பசியின்மை
4)வயிறு எரிச்சல்
5)நெஞ்சு பகுதியில் எரிச்சல்
6)வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வு
7)வயிறு வீக்கம்

வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

காரமான உணவுகளைசாப்பிடக் கூடாது.அதிக புளிப்பான உணவுகளை உட்கொள்ளக் கூடாது.பதப்படுத்தி வைக்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.சிட்ரஸ் உணவுகளை தவிர்ப்பது நல்லது.எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

காஃபின் உணவுகள் மற்றும் பானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.மசாலா அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

நார்ச்சத்து,நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.வேகவைத்த முட்டை சாப்பிட வேண்டும்.புரோபயாடிக் உணவுகளை சாப்பிட வேண்டும்.பருப்பு,முழுதானியங்கள்,கெபிர்,யோகர்ட் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடல் புண்ணை குணப்படுத்தும் மூலிகை வைத்தியம்:

1)குருதி நெல்லி – சிறிதளவு
2)தண்ணீர் – கால் கிளாஸ்

குருதி நெல்லியை தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாறை வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் குடல் புண் பாதிப்பு குணமாகும்.

குருதி நெல்லியை பொடித்து தயிரில் கலந்து சாப்பிடலாம்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை பானங்களை பருகலாம்.வெந்தயத்தை பொடித்து தயிர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டால் குடல் புண்கள் ஆறும்.