கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

Divya

நாட்டு மருத்துவம் பல நோய்களை குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.பண்டைய காலத்தில் இருந்து நாட்டு மருந்து அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்பொழுது அலோபதி மருத்துவம் அதிகரித்துவிட்டதால் நாட்டு மருந்து பயன்பாடு குறைந்து வருகிறது.

முன்பெல்லாம் சளி பிடித்தால் வீட்டில் இருக்கின்ற துளசி,தூதுவளை,வெற்றிலை போன்ற மூலிகைகளை கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் தற்பொழுது மருந்து,ஊசி என்று காலம் மாறிவிட்டது.

சிலருக்கு நாட்டு மருந்து மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.இதில் கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.பல வகை சளி பிரச்சனை இருக்கிறது.இதில் நெஞ்சு சளி பாதிப்பு தீவிர பிரச்சனையாக இருக்கிறது.இந்த தீவிர நெஞ்சு சளி பாதிப்பு இருப்பவர்களுக்கு கருஞ்சீரகம் சாப்பிடுவது செட்டாகாது.

சைனஸ்,மூக்கடைப்பு,சாதாரண சளி போன்ற பாதிப்புகளை கருஞ்சீரகம்,பூண்டு ஆகியவற்றை கொண்டு சரி செய்துவிடலாம்.ஆனால் தீவிர நெஞ்சு சளி பாதிப்பை இந்த மருந்தால் குணப்படுத்த முடியாது.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெள்ளைப்பூண்டு பற்கள் – நான்கு
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த கருஞ்சீரகத்தை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு லேசாக தட்டி அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.கருஞ்சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் லேசாக ஆறவைத்து வடித்து பருக வேண்டும்.