இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் நீங்கள் வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போக மாட்டீங்க!!

Photo of author

By Divya

இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் நீங்கள் வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போக மாட்டீங்க!!

Divya

நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் முருங்கை இலை ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அபூர்வ மூலிகையாகும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முருங்கை இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது உலகம் முழுவதும் இந்த முருங்கை இலை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.முருங்கை இலையில் வைட்டமின்கள்,இரும்பு போன்றவை அதிகரித்து காணப்படுகிறது.தினமும் முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முருங்கை கீரை சளி,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும்.முருங்கையின் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.முருங்கை கீரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.முருங்கை கீரை இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முருங்கை கீரையை உட்கொள்ளலாம்.இரத்த சோகை பாதிப்பில் இருந்து மீள முருங்கை கீரை சாப்பிடலாம்.உடல் தசைகளை வலிமைப்படுத்த முருங்கை கீரை சாப்பிடலாம்.

முருங்கை கீரையில் அருமையன சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

கைப்பிடி அளவு முருங்கை கீரை
ஒரு தக்காளி
ஒரு வெங்காயம்
இரண்டு வெள்ளைப் பூண்டு பல்
தேவையான அளவு உப்பு
ஒரு துண்டு இஞ்சி
அரை தேக்கரண்டி சீரகம்
கால் தேக்கரண்டி மிளகுத் தூள்
கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
கால் தேக்கரண்டி தனியா

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் முருங்கை கீரை,நறுக்கிய தக்காளி பழம்,வெங்காயம் ஆகியவற்றை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் இரண்டு வெள்ளைப்பூண்டு பல்லை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த முருங்கை கீரையை போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் இடித்த இஞ்சி துண்டு,கால் தேக்கரண்டி மிளகுத் தூள்,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் தூள் மற்றும் கால் தேக்கரண்டி தனியா தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.இப்படி செய்து குடித்தால் உங்கள் உடலில் எந்த நோய் பாதிப்பும் அண்டாது.