தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் விவாதங்கள் நடைபெற்ற நிலையில் விவாதங்களின் முடிவில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விவாதங்களின் முடிவில் புதிய அறிவிப்புகளாக திருக்கோயில் பூசை உபகரணங்கள் திருமண உதவித் தொகை அர்ச்சகர்களுக்கு இருசக்கர வாகனம் மானியம் கோயில் திருப்பணிக்கான நிதி உயர்வு என பல்வேறு சிறப்பு திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை வெளியிட்ட புதிய அறிவிப்புகள் :-
✓ ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 19,000 திருக்கோயில்களுக்கு 15 கோடி ரூபாயில் பித்தளை, தாம்பளம், தூபக்கால், மணி மற்றும் விளக்கு உள்ளிட்ட பூசை உபகரணங்கள் வழங்கல்.
✓ இந்த ஆண்டு 1000 ஜோடிகளுக்கு 70 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்க முடிவு
✓ ஒரு கால பூஜை திட்ட கோயில்களில் வேலை பார்க்கக்கூடிய அர்ச்சகர்கள் கிராம கோயில்களில் இருக்கக்கூடிய பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்கக் கூடிய கிராம கோவில் பூசாரிகள் ஆதிதிராவிடர் கோவில் பூசாரிகள் அர்ச்சகர்கள் என 10 ஆயிரம் நபர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க தலா 12,000 ரூபாய் மானியமாக வழங்க முடிவு.
✓ பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு வரக்கூடிய கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கு அனைத்து நாட்களிலும் கட்டணம் இல்லா உணவு வழங்க முடிவு
✓ திருவண்ணாமலை பார்த்தசாரதி கோயில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருச்செந்தூர் பழனி திருவரங்கம் திருத்தணி உள்ளிட்ட 10 திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டணம் இல்லா தரிசனம்
✓ ஹிந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்களில் 70 ஓதுவர் காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு
✓ வின்ச் மற்றும் ரோப் கார்களில் இறை தரிசனத்திற்கு கட்டணமில்லா சேவை
✓ திருவரங்கம் கோவிலில் புதிய கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைக்க முடியும்
நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் முடிவு மேலே குறிப்பிட்ட பல முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.