படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலமாக படித்தபட்ட வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை விண்ணப்பங்களை தற்பொழுது வழங்கி வருவதாகவும் இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் உதவி தொகையை பெறுவதற்கு சில தகுதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அதர் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்து இருக்க வேண்டும் என்றும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதிகள் பெற்று இருக்க வேண்டும் என்றும் பெற்று இருக்க வேண்டும் என்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிட்ட திட்டத்தில் உதவி தொகை பெற நினைக்கக்கூடிய நபர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்திருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு 45 ஆண்டுகள் வரை வயது தளர்வு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுய தொழிலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்றும் குடும்ப வருமானம் ஒரு ஆண்டுக்கு 72,000 குறைவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரல் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏற்கனவே வேற ஏதேனும் ஒரு திட்டத்தில் பயன்பெறக்கூடியவர்களுக்கு திட்டத்தின் கீழ் பயன்பட முடியாது என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.