கோடை காலத்தில் அதிக சூட்டால் அம்மை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.சின்னம்மை,கொத்தமல்லி அம்மை என்று அம்மையில் பல வகைகள் இருக்கிறது.எந்த அம்மை பிரச்சனையாக இருந்தாலும் அதை சீக்கிரம் குணப்படுத்திக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள்.
முதலில் அம்மை போட்டவர்களை தனிமை படுத்த வேண்டும்.அவர்களுக்கு முழுமையாக குணமாகும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.அம்மை வந்தவர்கள் பயன்படுத்திய உடைமைகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அம்மை பாதித்தவர்கள் வேப்பிலை மற்றும் மஞ்சளை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இதில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது.
அம்மை நோய் அறிகுறிகள்:
1.கண் எரிச்சல்
2.நமைச்சல்
3.திடீர் காய்ச்சல்
4.கன்னத்தில் வீக்கம்
5.சருமத்தில் கொப்பளம்
அம்மை நோய் பாதிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:
1)தாழம்பூ
2)தண்ணீர்
3)கற்கண்டு
பாத்திரத்தில் சில தாழம் பூக்களை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் ஒரு கற்கண்டை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் அம்மை நோய் குணமாகும்.
1)கறிவேப்பிலை
2)வேப்பிலை
3)தேன்
முதலில் ஒரு கொத்து கறிவேப்பிலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கொத்து வேப்பிலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு சுத்தப்படுத்திருந்த கறிவேப்பில்லை மற்றும் வேப்பிலை அதில் போடு கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இதை ஒரு கிளாசில் வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.இப்படி குடித்தால் அம்மை நோய் குணமாகிவிடும்.