நம் உணவின் சுவை கூட்டியாக பூண்டு பயன்படுத்தப்படுகிறது.நாம் உட்கொள்ளும் பூண்டு பல நன்மைகளை கொண்டிருக்கிறது.தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிட்டால் சற்று கூடுதல் பலன்கள் கிடைக்கும்.பூண்டு டீ,பூண்டு ஜூஸ் என்றும் சாப்பிடலாம்.
பூண்டு பற்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.காலை நேரத்தைவிட இரவில் பூண்டு பற்களை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு பாதிப்பு குறையும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க பூண்டு சாப்பிடலாம்.
இரத்தத்தில்கொழுப்பு சேராமல் இருக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.இரத்தக் கொதிப்பு,உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க பூண்டு பானம் பருகலாம்.இரவு நேரத்தில் பூண்டு சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு எடையை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டு பற்களை தினசரி சாப்பிடலாம்.உணவு சாப்பிட்ட பிறகு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தை அடைபவர்கள் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு பலனடையலாம்.இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு கரைய பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.
உடலில் நோய் தாக்கத்தை குறைக்க தினமும் இரவு நேரத்தில் பூண்டு பல் சாப்பிடலாம்.இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பூண்டு பல் உட்கொள்ளலாம்.
பூண்டு பற்களை பயன்படுத்துவது எப்படி?
தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னர் பூண்டு சாப்பிட வேண்டும்.தரமான பூண்டு பற்களை தேர்வு செய்து நெருப்பில் சுட்டு சாப்பிட வேண்டும்.
சிலருக்கு பச்சை பூண்டு பல் வாசனை பிடிக்காமல் இருக்கும்.அப்படி இருப்பவர்கள் இதுபோன்று பூண்டு பல்லை சுட்டு உட்கொள்ளலாம்.தினமும் ஒரு கிளாஸ் பூண்டு பானம் செய்து பருகலாம்.
பூண்டு சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.இருப்பினும் அதன் பலன் கிடைக்க நீங்கள் பூண்டு பற்களை சாப்பிட வேண்டும்.நாள் ஒன்றில் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை உட்கொள்ளலாம்.காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்றாலும் இரவு நேரத்தில் அதை சாப்பிடும் பொழுது முழு பலனையும் அனுபவிக்கலாம்.