உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை வேரோடு கரைக்க இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த இரண்டு மூலிகை பானங்களை செய்து குடிக்கலாம்.திரிபலா சூரண பானம்,சீரக பானம் உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
தேவைப்படும் பொருட்கள்:-
தான்றிக்காய்
கடுக்காய்
நெல்லிக்காய்
தண்ணீர்
பயன்படுத்தும் முறை:-
முதலில் தான்றிக்காய்,கடுக்காய் மற்றும் பெரிய நெல்லிக்காய் தலா 50 கிராம் அளவிற்கு வற்றல் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து இத்தனை மிக்சர் ஜார் பயன்படுத்தி பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஈரம் இல்லாத டப்பாவில் இதை கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த 150 மில்லி தண்ணீரை சூடாக்கி அதில் இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கலந்து குடிக்க வேண்டும.
காலையில் ஒரு கிளாஸ் மற்றும் மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு இந்த பானம் குடித்தால் தொப்பை,இடுப்பு கொழுப்பு கரையும்.
தேவையான பொருட்கள்:-
சீரகம்
எலுமிச்சை சாறு
தேன்
தண்ணீர்
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.சீரக பானம் நன்றாக கொதித்து வந்ததும் கிளாஸிற்கு இதை வடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு எலுமிச்சம் பழம் ஒன்றை நறுக்கி அதன் சாறை சீரக பானத்தில் பிழிந்துவிட வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து சாப்பிட்டால் உடல் கொழுப்பு கரைந்துவிடும்.