தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!

Photo of author

By Divya

தலைமுடி கையோடு வருதா? வெறும் நாலு போதும்.. முடி கொட்டாமல் அடர்த்தியாக வளரும்!!

Divya

ஆண்,பெண் அனைவருக்கும் முடி உதிர்வு பொதுவானதாக இருக்கிறது.சிலருக்கு தலையை தொட்டாலே முடி உதிர்வு ஏற்படுகிறது.முன்பைவிட தற்பொழுது தலைமுடி உதிர்வு பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவாக தலை முடி உதிர்வு அதிகமாகிறது.முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் வழுக்கை விழத் தொடங்கிவிடும்.

தலைமுடி உதிரக் காரணங்கள்:

தைராய்டு பாதிப்பு
மன அழுத்தம்
தலைமுடி பராமரிப்பின்மை
பொடுகுத் தொல்லை
தலை அரிப்பு
ஹார்மோன் பிரச்சனை

தலைமுடி உதிர்வை சரி செய்ய என்ன பண்ணலாம்?

தினமும் ஒரு கிளாஸ் மிளகு பால் குடித்தால் தலைமுடி உதிர்வு நிற்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த மிளகு எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)மிளகு – நான்கு

செய்முறை விளக்கம்:-

கரு மிளகு நான்கு எடுத்து உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

பால் கொதி வந்த பின்னர் இடித்த மிளகை அதில் போட்டு சிறிது நேரம் காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த மிளகு பாலை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து குடித்தால் தலைமுடி உதிர்வு பிரச்சனையே ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
2)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பாத்திரம் ஒன்றில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து தலைக்கு தடவி வந்தால் முடி உதிராமல் இருக்கும்.