நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பொடியில் டீ போட்டு குடித்துவரலாம்.நிச்சயம் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.மாரடைப்பு,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு இந்த டீ அருமருந்தாக திகழ்கிறது.
தேவைப்படும் பொருட்கள்:-
1)வெந்தயம் – 25 கிராம்
2)ஓமம் – 25 கிராம்
3)கருஞ்சீரகம் – 25 கிராம்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 25 கிராம் வெந்தயத்தை கொட்டி வறுக்க வேண்டும்.வெந்தயம் பொன்னிறமாக வறுபட்டு வந்த பின்னர் இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
அடுத்து அதில் 25 கிராம் ஓமத்தை போட்டு வறுக்க வேண்டும்.அதன் பிறகு 25 கிராம் கருஞ்சீரகத்தை வாணலியில் கொட்டி வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
இப்பொழுது இந்த மூன்று பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த பொடியை பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் அரைத்த பொடியை பொடி தேவையான அளவு போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.இரத்தக் குழாயில் இருக்கின்ற கொழுப்புகளை கரைக்க இந்த பானத்தை குடிக்கலாம்.கருஞ்சீரகம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி – ஒரு துண்டு
2)இலவங்கப்பட்டை – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு பட்டையை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் இஞ்சை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் இடித்த பட்டையை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்தால் இதயப் பிரச்சனைகள் குணமாகும்.
மாரடைப்பு மற்றும் இதய நோய் பாதிப்பு குணமாக இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.