புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

Photo of author

By Divya

புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!

Divya

மது மற்றும் புகைப்பழக்கத்தால் கெட்டுப்போன நுரையீரலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த பானத்தை செய்து ககுடிங்க.நாம் சுவாசிக்க நுரையீரலின் பங்கு இன்றியமையாதது.இந்த நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.ஆனால் மோசமான உணவுமுறை மற்றும் குடி பழக்கத்தால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.நுரையீரல் பலம் அதிகரிக்க கீழ்கண்ட பானம் செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை – ஒரு துண்டு
2)ஏலக்காய் – ஒன்று
3)சிறு நெருஞ்சில் பொடி – ஒரு தேக்கரண்டி
4)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 50 கிராம் பட்டை,நான்கு ஏலக்காயை மிக்சர் ஜாரில் போட்டு போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் 50 கிராம் சிறு நெருஞ்சில் பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்த பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் இனிப்பு சுவைக்காக சிறிது சர்க்கரை சேர்த்து காய்ச்சி டீ,காபி போல் தினமும் செய்து குடித்து வந்தால் நுரையீலில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)அதிமதுரம் – 20 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் 20 கிராம் அதிமதுரத்தை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்த அதிமதுரப் பொடியை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் நுரையீரலில் தேங்கிய அழுக்குகள் வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)தேன் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து குடித்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.