GPAY, phonepe போன்ற யுபிஐ பண பரிவர்த்தனை தளங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் அல்லது அதற்கு மேலாக அனுப்பும் பட்சத்தில் அதற்கு 5% ஜிஎஸ்டியானது போடப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சகத்துடன் தீவிர நிதி அமைச்சகத்துடன் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவாக இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக்கும் என்றும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன.
யுபிஐ பரிவர்த்தனை என்பது தற்பொழுது மிக அதிகமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் மிக எளிமையான முறையில் அனைவரும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. இதுவரை யுபிஐ பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி வரி என்பது குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில் தற்பொழுது 2000 ரூபாய் ஒருவருக்கு பணப்பரிவர்த்தனை யுபிஐ மூலமாக செய்தாலே 5 சதவிகித ஜிஎஸ்டி போடப்படும் என்ற தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
ஜிஎஸ்டி என்ற மறைமுக வரியில் யுபிஐ பரிவர்த்தனைகளை சேர்ப்பது குறித்த முக்கிய பரிசீலனை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க கூடிய திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாகவும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவை எடுத்தாக வேண்டும் என்ற கட்டத்தில் இருப்பதால் கிரெடிட் கார்டு டி ஓ எஸ் பரிவர்த்தனைகளில் வரி பிடிப்பது போல இனி வரக்கூடிய காலங்களில் யுபிஐ பரிவர்த்தனையிலும் ஜிஎஸ்டி வரி பிடிப்பு கொண்டு வருவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.