தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரக்கூடிய 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகளிலும் கட்டாயமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் துணை ஆணையர்களுக்கு அத்துறையினுடைய இயக்குனர் டி. மோகன் அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
இனி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயங்களை கடைகளிலும் மக்களுக்கு பொருட்களை வழங்கும் பொழுது அதற்கான ரசீதுகளை வழங்கி ஆக வேண்டும் என்றும் ரசீதுகளை வழங்க வசதியாக காகிதங்கள் பிப்ரவரி மாதம் வரை நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அச்சிடப்பட்ட ரசீதுகளை தொடர்ந்து வழங்க தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திடம் இருந்து காகிதங்களை கொள்முதல் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் உதவி ஆணையர்களுக்கு காகிதங்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். தற்பொழுதுள்ள இருப்பின் படி மே மாதம் வரை நியாயவிலை கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க காகிதங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் அந்தியோதயா அன்னை யோஜனா முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்கள் என அனைவருக்கும் கட்டாயமாக பொருட்களை வழங்கும் போது அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீது வழங்கப்படுகிறதா என்பதை மத்திய அரசு கண்காணித்துக் கொண்டிருக்கும் என்றும் ஊழியர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்து முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.