ஓய்வூதியதாரர்களுக்கு வாங்கி தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தான் தற்பொழுது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நேரில் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது.
ஓய்வூதியதாரர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகைக்கு விதி 2008 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்த ஓய்வூதியத்தில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் இந்தியன் ரிசர்வ் வங்கியானது ஓய்வூதியதாரர்களுக்கு தாமதமாக ஓய்வூதிய தொகையை வழங்கக்கூடிய வங்கிகள் அதற்கான வடியையும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது ஒரு புறம் ஓய்வூதியதாரர்களை நிம்மதி அடைய செய்தாலும் மறுபுறம் வங்கிகளுக்கு நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கும் ஒரு முக்கிய முடிவை இந்தியன் ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது.
அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்து தங்களுடைய ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதியை வங்கிகள் வழங்க வேண்டும் என்றும் அதன் மூலம் டிஜிட்டல் ஆயில் சான்றிதழ்கள் செல்லுபடி ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் அனைத்து வழிகாட்டுதல்களையும் வங்கியின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.