குரூப் 1 தேர்வர்களுக்கான விண்ணப்ப தளம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கிய நிலையில் தேர்வுக்கு தயாராகி வரக்கூடிய பல தேவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே குரூப்-1 தேர்விற்கு பயிற்சி பெற்று கொண்டு இருக்கக்கூடிய தேர்வர்கள் உடனடியாக தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in சென்று தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
குரூப் 1 தேர்வுக்கான காலி பணியிடங்கள் :-
✓ துணை ஆட்சியர் பதவி – 28
✓ டிஎஸ்பி – 7
✓ வணிகவரி உதவி ஆணையர் – 19
குரூப் 1A தேர்வுகளுக்கான காலி பணியிடம் :-
✓ குரூப் 1A பிரிவு – 2
குரூப் 1 மற்றும் 1A தேர்வுகளுக்கான காலி பணியிடங்கள் மொத்தமாக 70 உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான முதல் நிலை தேர்வு வருகிற ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே இந்த தேர்வுகளுக்கு தயாராகி வரக்கூடிய மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை உடனடியாக அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.