உடலை சுத்தம் செய்ய நாம் தினமும் குளிக்கின்றோம்.குளிப்பதால் உடலில் படிந்துள்ள அழுக்குகள்,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்கள் நீங்கி உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.சிலருக்கு தினமும் காலை,இரவு என்று இருமுறை குளிக்கும் பழக்கம் இருக்கும்.உடலை சுத்தப்படுத்திக் கொள்ள நாம் குளிக்கின்றோம் என்றாலும் அதை சரியாக செய்யவில்லை என்றால் பலன்கள் கிடைக்காது.
அதிக நேரம் குளித்தால் உடலில் இருக்கின்ற அழுக்குகள் நீங்கிவிடும் என்று நினைப்பது தவறு.நாம் நீண்ட நேரம் குளித்தால் நமது சருமத்தின் இயற்கை எண்ணெய் குறைந்துவிடும்.சருமம் வறண்டு தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆன்டிபாக்டீரியால் சோப் பயன்படுத்தி குளித்தால் நமது சருமத்தில் இருக்கின்ற நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.இதனால் சருமம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.அதிக நேரம் தலைக்கு குளித்தால் தலையின் இயற்கை எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்துவிடும்.தலை வறட்சி,பொடுகுத் தொல்லை,முடி சேதம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதேபோல் அதிக சூடான நீரில் குளித்தால் தலைமுடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.சூடான நீர் தலை அரிப்பை உண்டாக்கிவிடும்.
தலைக்கு குளிக்கும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்:
1)நம் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்தால் முடி உதிராமல் இருக்கும்.முடிக்கு ஒருவித பளபளப்பு கிடைக்கும்.
2)அதேபோல் சரியான pH லெவல் கொண்ட சோப் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.உங்கள் சருமத்திற்கு தகுந்த சோப்பை பயன்படுத்துங்கள்.
3)முதலில் கால் பாதங்களை தண்ணீர் ஊற்றி நினைக்க வேண்டும்.அதன் பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.அதிக நேரம் சோப் மற்றும் ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
4)அலர்ஜி,சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம்.குளிக்கும் பொழுது சருமத்திற்கு அழுத்தம் கொடுத்து தேய்க்க கூடாது.ஜென்டில் மசாஜ் செய்து குளித்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.