ஸ்வீட் கார்ன் என்று அழைக்கப்படும் இனிப்பு சோளத்தை விரும்பாதவர்கள் யாருமில்லை.இதை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஸ்வீட் கார்னில் நிறைவுற்ற கொழுப்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.
இது தவிர வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தற்பொழுது ஜங்க் புட்களில் ஸ்வீட் கார்ன் சேர்ப்பது அதிகரித்து வருகிறது.ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஸ்வீட் கார்ன் ஊட்டச்சத்துக்கள்:
**நார்ச்சத்து **நிறைவுற்ற கொழுப்பு **வைட்டமின் சி **சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து காணப்படுகிறது.
1)இதில் இருக்கின்ற நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.அடிக்கடி ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் இரத்தத்தில் கொழுப்பு சேராமல் இருக்கும்.
2)ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.
3)சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சுவீட் கார்னில் புரதம்,வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
4)ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும்.இதில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.
5)ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஸ்வீட் கார்ன் சாப்பிடலாம்.சால்ட்,சுண்டல் என்று ஸ்வீட் கார்னை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
6)ஸ்வீட் கார்னில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.
7)ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால் இரத்த கொழுப்பு அளவு குறையும்.ஸ்வீட் கார்னில் இருக்கின்ற நிறைவுற்ற கொழுப்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கும் ஸ்வீட் கார்னை வேகவைத்து வெண்ணெய்,உப்பு,மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் தடவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.