நீங்கள் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு தகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட பொட்டாசியம்,சோடியம் குறைவாக இருக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
இது தவிர வேறு என்னென்னெ உணவுகளை உட்கொண்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
1)சின்ன வெங்காயம்
தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் நீங்கும்.சின்ன வெங்காயச் சாறு சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
2)முள்ளங்கி
ஒரு முள்ளங்கியை பொடியாக நறுக்கி சாறு எடுத்து பருகினால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.சிறுநீரகத்தில் அழுக்கு,கழிவுகள் தேங்காமல் இருக்க முள்ளங்கி சாறு செய்து குடிக்கலாம்.
3)மஞ்சள் தூள்
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் மஞ்சள் தூள் மிகஸ் செய்து பருகினால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
4)பூண்டு பல்
இரவில் ஒரு வெள்ளைப்பூண்டு பல்லை சுட்டு இடித்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் சிறுநீரக கழிவுகள் வெளியேறும்.
5)சிவப்பு திராட்சை
சிறுநீரக கழிவுகள் வெளியேற சிவப்பு திராட்சை பழத்தை ஜூஸாக செய்து குடிக்கலாம்.சிவப்பு திராட்சை விதையை பொடித்து சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
6)காலிஃப்ளவர்
இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இதை அடிக்கடி உணவாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
7)மஞ்சள் பூசணி விதை
ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் மஞ்சள் பூசணி விதையை வறுத்து பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
8)முட்டைகோஸ்
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை முட்டைகோஸை ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
9)எலுமிச்சை
வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை கிளாஸிற்கு பிழிந்து தண்ணீர் கலந்து குடித்தால் சிறுநீரகத்தில் படிந்துள்ள அழுக்கு,கற்கள் அனைத்தும் நீங்கும்.
10)பீட்ரூட்
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பீட்ரூட்டை ஜூஸாக அரைத்து குடித்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.