பண்டைய காலத்தில் இருந்தே வாழைப்பழம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும்.இந்த வாழைப்பழத்தில் மெக்னீசியம்,வைட்டமின்கள்,பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.
தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடல் பலவீனப் பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம்.வாழைப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.என்னதான் வாழைப்பழத்தில் நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் இதில் சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது.
வாழைப்பழம் சாப்பிட்டால் பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.பல் கூச்சம்,பல் ஈறு வீக்கம்,பல் சொத்தை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தீவிர பல் சொத்தை பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.பல் சொத்தை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் புழுக்கள் அதிகமாகிவிடும்.
நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
அளவிற்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிட்டால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.பகல் நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் தூக்கம் வரும்.வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படும் வாழைப்பழத்தை உட்கொண்டால் தலைவலி பாதிப்பு ஏற்படும்.குறிப்பாக ஒற்றைத் தலைவலி பாதிப்பை சந்திக்க நேரிடும்.வாழைப்பழத்தில் அதிக கலோரி நிறைந்திருக்கிறது.இந்த பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.
வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் என்றாலும் இதை அதிகமாக உட்கொண்டால் நிச்சயம் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டுவிடும்.வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் மூளை ஆரோக்கியம் பாதிப்படைந்துவிடும்.இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.