கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய் பாதிப்பு.இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அதன் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிய முடியாது.புற்றுநோய் முற்றிவிட்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து உயிரிழக்க நேரிடும்.
சிலவகை புற்றுநோய் பாதிப்பு பெண்களுக்கு மட்டும் ஏற்படும்.அதில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய்.இதனால் பிறப்புறுப்பு பகுதியில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படும்.மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்,யோனி பகுதியில் மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.யோனி பகுதியில் நீர் மற்றும் இரத்தம் வடிதல் போன்றவை கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.இந்த கருப்பை வாய் புற்றுநோக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற தவறினால் உயிர் சேதம் ஏற்படலாம்.
கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்:
1)கடுமையான இடுப்பு வலி
3)மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு
3)யோனியில் திரவம் வெளியேறுதல்
4)யோனியில் கடுமையான துர்நாற்றம்
5)சிறுநீர் வெளியேற்றும் பொழுது வலி
6)கடுமையான வயிற்றுவலி
கருப்பை வாய் புற்றுநோய்க்கான காரணங்கள்:
1)பாதுகாப்பற்ற உடலுறவு
2)கருப்பை வாய் அலர்ஜி
கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் வழிகள்:
HPV என்ற தடுப்பூசி செலுத்தி கொண்டால் கருப்பைவாய் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம்.HPV தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கருப்பையின் வாய்ப் பகுதியில் செல்கள் மாற்றமடைந்து புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்கும்.
கருப்பை புற்றுநோய் பாதிப்பை கண்டறிந்த உடன் அறுவை சிகிச்சை அல்லது கதிரியக்க சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
கருப்பை வாய்புற்றுபோய் பாதிப்பை தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள்:
பாதாம் பருப்பு,அக்ரூட் பருப்பை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.ஆளிவிதை,சியா விதை போன்றவற்றை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும்.முந்திரி பருப்பது தினமும் வறுத்து சாப்பிடலாம்.இஞ்சி,புதினா போன்ற பொருட்களை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.சின்ன வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிடலாம்.