இந்தியா முழுவதும் இரண்டு படிப்புகள் தற்பொழுது மிகவும் பிரபலமானதாக அதாவது அதிகமானோர் தேர்வு செய்யக்கூடியதாக இருந்து வருகிறது. ஒன்று நீட் நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்வாகும் பட்சத்தில் நேரடியாக மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவராக பணியாற்றுவது, மற்றொன்று டீச்சர் ட்ரைனிங் இல் படித்த நேரடியாக அரசு பள்ளிகளில் டீச்சர் வேலையை சுலபமாக வரலாம் எனக் மற்றொன்று டீச்சர் ட்ரைனிங் இல் படித்த நேரடியாக அரசு பள்ளிகளில் டீச்சர் வேலையை சுலபமாக பெற முடியும் என்ற சிந்தனை. இவை இரண்டுமே வரக்கூடிய காலங்களில் மாறும் என்றும் இலவசமாகவே மருத்துவம் இனி உலகம் முழுவதும் கிடைக்கப் போகிறது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய செய்திருக்கிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :-
✓ 2035க்குள் செயற்கை நுண்ணறிவு டாக்டர்கள் ஆசிரியர்கள் மற்றும் பல தொழில் முனைவர்களை மாற்றி விடும் என்றும் சிறந்த மருத்துவ ஆலோசனையும் சிறந்த தனிப்பட்ட கற்றல் சேவையையும் இலவசமாக கிடைக்கும் அளவிற்கு AI தொழில்நுட்பமானது முன்னேறும் என்றும் 100% அடித்துக் கூறியிருக்கிறார்.
இனி வரக்கூடிய காலங்களில் உலகம் ஒரு இலவச நுண்ணறிவு யுகத்திற்குள் நுழைய இருப்பதாகவும் நிபுணத்துவம் கொண்ட அறிவும் சேவைகளும் எல்லோருக்கும் இலவசமாக அல்லது குறைந்த செலவில் கிடைப்பதற்கான புதிய சூழல் உருவாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு டாக்டர் மற்றும் ஆசிரியர் போன்ற தொழில்கள் காணாமல் போய்விடும் என்றும் இந்த இரண்டு பணிகளிலும் AI தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்றும் பில் கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.