புரத உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை மிஸ் பண்ணாம படிங்க!!

Photo of author

By Divya

புரத உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை மிஸ் பண்ணாம படிங்க!!

Divya

நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது.குறிப்பாக புரத உணவுகள் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய ஊட்டச்சத்தாகும்.புரதமானது அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரு மூலக்கூறு ஆகும்.பால்,முட்டை,காய்கறிகள் என்று எல்லாவற்றிலும் இருந்தும் புரதம் கிடைக்கிறது.

ஆனால் புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியம் இல்லாத உணவுககை உட்கொண்டால் புற்றுபோய் பாதிப்புகூட வரலாம்.நமது உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் புரதம் நிறைந்து காணப்டுகிறது.நமது உடல் கட்டமைப்பில் புரதத்தின் பங்கு இன்றியமையாதது.

நமது உடலில் தேங்கும் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகம் உடலில் அதிக புரதம் இருந்தால் பாதிக்கப்பட்டுவிடும்.அதிக புரதம் உட்கொண்டால் அது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரதம் இருக்க வேண்டியது முக்கியம்.ஆனால் அளவிற்கு அதிகமாக புரதம் சாப்பிட்டால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதாவது சரும அலர்ஜி,செரிமானப் பிரச்சனை,தலைவலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.குறிப்பாக ஆட்டிறைச்சி,மாட்டிறைச்சி போன்றவற்றில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது.ஆனால் அதிக புரதம் நிறைந்த உணவுகள் கொலஸ்ட்ரால் பிரச்சனையை அதிகப்படுத்திவிடும்.இதனால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகரிக்கும்.

புரதம் நிறைந்த ஆரோக்கிய உணவுகள்:

பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,பாசி பருப்பு,பீன்ஸ் போன்ற உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு ஆரோக்கிய புரதம் அதிகமாக கிடைக்கும்.நாம் தினமும் நல்ல புரத உணவுகளை உட்கொண்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.