நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.நாவல் பழம்,நாவல் விதை,நாவல் இலை,நாவல் மரப்பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்ட பொருளாகும்.ஊதா நிறத்தில் இருக்கும் இந்த பழம் ஜாமுன் என்றும் அழைக்கப்படுகிறது.இனிப்பு,துவர்ப்பு நிறைந்த இந்த நாவல் பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாவல் பழம் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நன்மைகள் நிறைந்த நாவல் பழத்தை சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகளும் ஏற்படும்.
அதிகளவு நாவல் பழம் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.நாவல் பழம் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.நாவல் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
அளவிற்கு அதிகமாக நாவல் பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும்.நாவல் பழத்தில் வைட்டமின் உள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றாலும் சிலருக்கு இது ஒவ்வாமையாக மாறலாம்.அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் நாவல் பழத்தை உட்கொண்டால் பருக்கள்,சரும எரிச்சல் நீங்கும்.
அளவிற்கு அதிகமாக நாவல் பழம் சாப்பிட்டால் குமட்டல்,நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.நாவல் பழத்தில் இருக்கின்ற அமிலம் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பல் ஆரோக்கியம் மேம்பட நாவல் பழம் சாப்பிடலாம்.
நாவல் பழம் உட்கொண்ட பின்னர் தண்ணீர்,பால் போன்ற எதையும் உட்கொள்ளக் கூடாது.இது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.கர்ப்பிணி பெண்கள் நாவல் பழம் அதிகம் சாப்பிடக் கூடாது.சிலருக்கு நாவல் பழம் சாப்பிடுவதால் தொண்டை பிடிப்பு,நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே நல்லது என்ற காரணத்திற்காக நாவல் பழம் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.